இவனால் எந்த ஒரு பலனும் இல்லை (tamil kids stories)

இவனால் எந்த ஒரு பலனும் இல்லை...

ஒரு ஊரில் ராஜன் எனும் குதிரை வளர்ப்பாளர் ஒருத்தர் இருந்தார். அவரிடம் ராமு சோமு எனும் இரண்டு குதிரைகளை வளர்த்து வந்திருந்தார். மிகவும் அன்பாக தான் குதிரைகளை நடத்துவார். தினசரி ஆக அவர் குதிரைகளை பராமரிப்பு செய்வார். அந்த இரண்டு குதிரைகளில் ராம குதிரை ஆனது மிகவும் சுறுசுறுப்பாகவும் விரைந்து ஓடும் தன்மை கொண்டும் இருந்தது. ஆனால் சோமு குதிரை விரைந்து ஓடும் ஆனால் சுறுசுறுப்பாக மட்டும் இருக்காது.

.             (Tamil kids stories)
இந்த இரண்டு குதிரைகளுக்கும் பராமரிப்பு மற்றும் உணவு என்பது சரி சமமாகவே இருக்கும். அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ராஜனிடம் வந்து குதிரையை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஆலோசனை கேட்டுப் பெறுவர். அவர் தன்னால் முடிந்த ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்குவார். ராமு குதிரை எந்த வேலை சொன்னாலும் விரைந்து முடிக்கும் தன்மை உடையது. ஆனால் சோமு குதிரை ஏதாவது ஒரு வேலையை கொடுத்தால் விரைந்து வேலையை செய்து முடிக்காது.(tamil kids stories)

அந்த ஊரில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தான் குதிரை பந்தயம் நடக்கும். அந்த வருட குதிரை பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கு உலகின் மிகச் சிறந்த குதிரை வளர்ப்பாளர் எனும் பட்டமும் பொன்னும் பொருளும் வழங்கப்படும். இந்த வருடமும் அந்த குதிரை பந்தயம் நடக்க இருந்தது அதற்காக ஊர் பொது மக்கள் அனைவரும் திரண்டு திட்டம் தீட்டினர். இன்னும் 30 நாட்களில் பந்தயம் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஊர் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் குதிரைகளை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
அதன்படி ராஜன் தன் இரண்டு குதிரைகளையும் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ராமு குதிரை நல்ல தயார் நிலையில் இருந்தது அதன் ஓடும் திறனும் மிகவும் அதிகமாகவே இருந்தது. சோமு குதிரை விரைந்து ஓடினாலும் கூட ராமு குதிரையின் அளவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தன் குதிரையான சோமுவிடம் நீ ஏன் இவ்வாறு செய்கிறாய். ஏன் விரைந்து ஓட மறுக்கிறாய் என்று அன்பாகப் பேசுவார். ஆனால் சோமு குதிரை எது சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை. (Tamil kids stories)

இவ்வாறு சில நாட்கள் கழிந்தது. குதிரை பந்தயத்திற்கு இன்னும் குறைந்த தினங்களே இருக்கும் நிலையில் ‌ ராமு  குதிரை முதலில் இருந்ததைவிட தற்போது மிகவும் அதிக வேகத்துடன் ஓடும் நிலையில் இருக்கிறது. ஆனால் ராஜன் எவ்வளவு முயற்சி செய்தாலும் சோமு குதிரையை நான் நினைத்ததை முடிக்க முடியவில்லை. ஆனாலும் ராஜன் மனம் தளராமல் சோமு குதிரையை எப்படியாவது தயார் செய்ய வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால் ராஜன் இடும் கட்டளைகளுக்கு சோமு குதிரை ஏற்க மறுத்தது. ராஜன் என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தார். சோமுவை களத்தில் இறக்கலாமா வேண்டாமா என்று இரு மனதுடன் இருந்தார். (Tamil kids stories)

குதிரைப் பந்தயப் போட்டி ஒரு தினமே இருக்கும் நிலையில் ராஜனுக்கு வேண்டத்தகாத ஒருத்தர். குதிரை பந்தயத்திற்கு தயார் நிலையில் இருந்த ராமு குதிரையை ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார். குதிரைப் பந்தயத்தில் கலந்து கொண்டால் ராமு குதிரை தான் வெற்றி பெறும் என்பதை அறிந்து கொண்டு ராமு குதிரை உண்ணும் உணவில் மயக்கம் கலந்த பொருளை கலந்து கொடுத்தார். தன் நிலையை மறந்து ராம குதிரை பரிதாப நிலைக்கு உள்ளானது. ராமு குதிரையை பார்க்கச் சென்ற குதிரை கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானார்.  என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற ராஜன் குதிரை கீழே விழ காரணமான பொருளைக் கண்டுபிடித்தார். அந்தப் பொருளைக் கொடுத்தால் குதிரை மயக்க நிலையில் இருக்கும் என்பதை கண்டுபிடித்தார்.(tamil kids stories)

ராமு குதிரையின் நிலைமையைக் கண்டு ராஜன் மிகவும் வருத்தமடைந்தார். ராஜனின் நண்பரொருவர் கவலைப்படாதே ராஜா ராமு குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டாள் அதுதான் வெற்றி பெறும் என்பது தெரிந்த ஒருவர் தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலாக சோமு குதிரையை பந்தயத்தில் இறக்கலாம் என்று கூறினார். நாளை நடக்க இருக்கும் குதிரை பந்தய போட்டிக்கு சோமு குதிரையைக் இறக்கலாம் என்று முடிவு செய்தார். பிறகு ராமு குதிரையை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். சோமு குதிரை நிலையை உணர்ந்து ஆனால் சோமு குதிரை வேகமாக ஓடும் என்பது சற்று கேள்விக்குறியாகவே இருந்தது. (Tamil kids stories)

காலைப் பொழுது விடிந்தது குதிரை பந்தயத்திற்கு அனைத்து குதிரைகளும் தயாரானது சோமு குதிரையும் தயாரானது. சோமு குதிரை களத்தில் விரைந்து ஓடுமா என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. மொத்தமாக பத்து குதிரைகள் போட்டிக்கு தயாராக இருந்தன. போட்டி துவங்கியது அனைத்து குதிரைகளும் வேகமாக ஓடி நிலையில் சோமு குதிரை மற்ற அனைத்து குதிரைகளை விட பின் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. மற்ற குதிரைகள் அனைத்தும் வேகமாக பந்தய கோட்டிற்கு அருகில் சென்றன. சோமு குதிரை பத்தாவது ஆளாக வந்து கொண்டிருந்தது. ராஜன் வளர்த்த சோமு குதிரை பந்தயத்தில் தோற்றது. பந்தயத்தில் சோமு குதிரையின் சோம்பேறித்தனம் தான் அதன் தோல்விக்குக் காரணமானது.
பந்தயத்தில் தோல்வியுற்ற ராஜன் மிகவும் மனவருத்தம் அடைந்தார். சோமு குதிரையுடன் சென்று ஏன் இப்படி செய்கிறாய்  மிகவும் கோபத்துடன் கேட்டார். உனது நண்பன் ராமு குதிரை மயக்க நிலையில் உள்ளதை அறிந்தும் நீ இந்தப் பந்தயத்தில் வெற்றி பெறவில்லை என்று கோபத்துடன் திட்டினார். ஆனால் சோமு குதிரை மனம் தளராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. ராஜன் மிகவும் மனமுடைந்து போனார். சோமு குதிரையை திட்டி விட்டு என்னிடம் பேசாதே என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான். தற்போது நிலைமையை உணர்ந்துகொண்ட சோமு குதிரை மிகவும் மனம் வருத்தம் அடைந்தது. (Tamil kid's stories)

சோமு குதிரையின் சோம்பேறித்தனத்தால் தான் இவ்வாறு நிகழ்ந்தது. இனிமேலாவது சோமு குதிரை சுறுசுறுப்பாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

சோமு குதிரையைப் போல தான் நம்மில் பல பேர் இன்னும் சோம்பேறித்தனமாகவும் அசால்ட்டு தனமாகவும் இருக்கிறோம். இந்த நிலை நாம் மனது வைத்தால் மட்டும் தான் மாறமுடியும் இல்லையென்றால் சோமு குதிரையைப் போல் கடைசியில் வருத்தம் அடைய வேண்டும்.

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்...

Post a Comment

0 Comments