ஒரு அடர்ந்த காட்டில் நாங்கு கலைமான்கள் இருந்தன. அந்த நான்கு கலைமான்கள் ஒன்றுக்கொன்று மிகவும் அன்பாக இருந்தது. இந்த மான்களின் பலமே அவைகளின் ஒற்றுமை தான். அந்தக் காட்டிற்கு ராஜாவான சிங்கம் இந்த மான்களை எப்படியாவது வேட்டையாட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தது. இந்த மான்களின் ஒற்றுமையால் அவைகளுடன் நெருங்க முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் இந்த மான்களை வேட்டையாடும் வேண்டும் என்ற எண்ணம் சிங்கத்திற்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு முறையும் ராஜா ஏதாவது ஒரு செயலை செய்யும். நான்கு மான்கள் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு மானையாவது அடித்து சாப்பிடலாம் என்று எண்ணம் தோன்றும். ஒரு மானிடம் நெருங்கும் போது மற்ற கலைமான்கள் சிங்கம் வருவதை உணர்ந்து தப்பித்து ஓடி விடும். இதனால் சிங்கம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த மான்களிடம் நெருங்க கூட முடியவில்லை.(tamil kids stories)
இந்த மான்களை வேட்டையாடி சிங்கம் ஒரு திட்டம் தீட்டியது. இந்த மான்கள் ஒற்றுமையாக இருந்தால் தானே நம்மால் நெருங்க முடியவில்லை. என்று யோசித்தது. முதலில் எப்படியாவது இந்த மான்களை பிரிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது. அதன்படி முதலில் ஒரு மானிடம் சென்று பயப்படாதே நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன் என்று சாந்தமாக பேசியது. பயத்துடன் இருந்த அந்த கலைமான் சிங்கராஜா எதைப்பற்றி பேசப் போகிறது என்று வியப்பாக பார்த்தது. சிங்கம் தனது வேலையைத் தொடங்கியது. முதலில் அந்தக் கலை மானிடம் நீ ஏன் கூட்டமாக அவர்களுடன் சுற்றித் திரிகிறாய் என்றது.
அந்தமான் இடம் மற்ற மூன்று மான்களை பற்றி தப்பு தப்பாக பேசியது. நீ என்னோடு வா உனக்கு வேறு ஒரு உலகத்தை காட்டுகிறேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறியது. சிங்கம் சொல்வது பொய் என்று தெரியாமல் அந்தமான் நம்பியது. இதேபோல் மற்ற மூன்று மான்கள் இடம் சென்று அதேபோல் கூறியது. சிங்கத்தின் சூழ்ச்சி தெரியாமல் சிங்கத்தின் பிடியில் சிக்கியது மான்கள்.(tamil kids stories)
மறுநாள் அந்த நான்கு மான்களும் சண்டையிட்டுக் கொண்டது. தூரத்தில் நின்று சிங்கம் மான்கள் சண்டையிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. எப்போது இவர்கள் பிரிவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது சிங்கம். மான்களின் சண்டை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போனது ஒரு கட்டத்தில் நாங்கு மான்கள் பிரிந்து வேறு வேறு பாதையில் சென்றது. எதிர்பார்த்த தருணம் அதன் கண்களில் தென்பட்டது.
மறுநாள் நான்கு மான்கள் ஒற்றுமை இல்லாமல் வேறு வேறு இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தது. இதை கவனித்த சிங்கம் நாம் செய்த செயல் சரியாக வேலை செய்துள்ளது என்று சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தது. இன்று எப்படியாவது ஒரு மானை வேட்டையாடி விட வேண்டும் என்று சிங்கம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நாங்கு மான்கள் பிரிந்து வேறு வேறு திசையில் இருந்ததால் எதையும் கவனிக்காமல் மேய்ந்து கொண்டிருந்தது. மான்கள் சண்டையிட்ட காரணத்தினால்ஒன்றுடன் ஒன்று பேசிக் கொள்ளாமல் இருந்தது. சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த சிங்கம் ஒரு மானை வேட்டையாடியது. இதை எதிர்பார்த்திராத மற்ற மூன்று மான்கள் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என்று வருந்தியது.(tamil kids stories)
சிங்கத்தின் சூழ்ச்சி எனத் தெரியாமல் நான்கு மான்களும் சண்டையிட்டு ஒரு மானை வேட்டையாட காரணமாக இருந்தது. இதை உணர்ந்த நான்கு மான்களும் இனிமேல் நான் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தது. தனது நண்பன் வேட்டையாட காரணமாக இருந்த சிங்கத்தை மூன்று மான்கள் சேர்ந்து சிங்கத்தை காட்டைவிட்டு துரத்தியது. அப்போதுதான் அந்த மான்கள் புரிந்து கொண்டன நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று மான்களுக்கு புரிந்தது. அன்று முதல் மான்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் யாரும் சொல்வதைக் கேட்காமல் தன் நண்பர்கள் முக்கியம் என்று அனைத்து மான்களும் யோசித்து செயல்பட்டு வருகிறது.(tamil kids stories)இந்த மான்களைப் போல் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நம்மால் சாதிக்க முடியும். மற்றவர்கள் வந்து நம்மிடம் ஏதாவது கூறினால் முதலில் அதை ஆராய வேண்டும் நம் நண்பன் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஒற்றுமையே பலம் என்று இந்த கதையின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்...
0 Comments
thanks for your comments