உங்களில் யார் புத்திசாலி... ( Tamil stories)
முன்னொரு காலத்தில் வாழ்ந்த சேனாதிபதி என்னும் அரசர் தனது நாட்டை ஆண்டு வந்தார். அவரைக் காண பல்வேறு மன்னர்கள் வரும் நிலையில் அனைவரையும் அன்பாக வரவேற்று உபசரிப்பார். தனது நாட்டில் வாழும் மக்களின் நிலையை காண நேரில் சென்று அனைவரையும் உபசரித்து விசாரிப்பார்.
மன்னரின் மனதில் பல ஆண்டுகளாக ஒரு கேள்வி தோன்றிக் கொண்டிருந்தது. அது என்னவென்றால் இந்த உலகில் யார் அதிபுத்திசாலி என்பதே ஆகும். தனது நாட்டில் யாரும் இல்லை என்பதை அவருக்கு வருந்த தக்க செய்தியாக இருந்தது.ஒரு போட்டி வைத்து அதில் யார் புத்திசாலி என்று தெரிந்து கொள்ளலாம் என்றார்.அதன்படி தண்டோரா மூலம் தனது நாட்டு மக்களிற்கு யார் புத்திசாலி எனும் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பக்கத்து நாட்டில் இருந்து பல புலவர்கள் வந்தநிலையில் அனைவரையும் உபசரித்தார். வந்த புலவர்கள் அனைவரையும் அனுசரித்து நலம் விசாரித்து தங்க வைத்தார். இரண்டு தினங்களுக்கு பிறகு அனைவரையும் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.( Tamil old story)
அந்தப் போட்டி என்னவென்று தெரியாமல் அனைத்து புலவர்களும் குழம்பி இருந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வந்தனர் மன்னர் எதை அறிவிப்பார் என்று அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர். யார் புத்திசாலி எனும் தலைப்பில் நடைபெறும் போட்டியில் காண அனைத்து மக்களும் ஆவலோடு அமர்ந்திருந்தனர். மன்னர் வந்தார் இங்கு கூடியுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் வணக்கம் என்று அறிவித்தார். யார் புத்திசாலி எனம் போட்டியைக் காண வந்த அனைத்து நாட்டு மக்களுக்கு நன்றி என்றும் இந்தப் போட்டி என்னவென்றால் இதோ இங்கு முன்னால் உள்ள இந்த அறையின் கதவை யார் இருக்கிறார்களோ அவர் தான் புத்திசாலி என்றார். இந்த அறையில் அதில் உள்ள அனைத்து விதமான பொருட்களும் யார் இந்த கதவைத் திறக்கிறார்களே அவர்களுக்கு சொந்தமானது என்றார். இந்த அறையில் மந்திர வார்த்தைகள் கூடிய எழுத்துக்களும் ஓவியங்களும் பொருத்தப்பட்டுள்ளன இதையும் தெரிவித்தார். பிறகு இந்த கதவை திறக்க இங்கு வந்துள்ளவர்கள் அனைவரையும் தேர்வு செய்ய முடியாது என்றும் அதில் யார் மிக சிறந்த புத்திசாலியும் ஒரு ஐந்து பேரை தேர்வு செய்வோன் என்றார்.(tamil king stroy)
மன்னர் கேட்கும் கேள்விகளுக்கு எந்த புலவர் சரியான பதில் கூறுகிறார்களே அவர்கள்தான் யார் புத்திசாலி எனும் போட்டியில் பங்கேற்க முடியும் என்றார். மன்னர் கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பல புலவர்கள் திணறினர். ஒரு ஐந்து புலவர்கள் மட்டுமே சரியான பதில் அளித்து அந்தப் போட்டியில் பங்கேற்றனர். இந்தக் கதவை நாளை திறக்கலாம் என்றார்.புலவர்கள் அனைவரும் தங்களுக்கு தெரிந்த புத்தகங்களை தெரிந்து இந்த கதையை பற்றி அறிந்து கொள்ளலாம் என்றார்.(tamil stories)
மன்னர் ஓய்வு எடுக்கச் சென்ற நிலையில் நாளை மறுநாளுக்காக புலவர்கள் காத்திருந்தனர். அனைத்து புலவர்களும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். புலவர்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்த ஓலைச்சுவடிகளை புரட்டிப் பார்த்தனர். ஆனால் ஒரு புலவர் மட்டும் சற்று நேரம் ஓலைச்சுவடிகளைப் எடுத்துப் பார்த்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார்.மீதம் இருந்த நான்கு புலவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் புத்தகங்களையும் ஓலைச்சுவடிகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.(tamil stories)
மறுநாள் காலை விடிந்தது ஐந்து புலவர்கள் தயாராகினர். அரசவையில் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மன்னர் வருகைக்காக காத்திருந்தனர். மன்னர் வந்தார். முதலில் யார் வந்து கதவைத் திறக்கிறார்கள் என்று அவர் கேட்டார். புலவர்களுக்கு ஒவ்வொருவராக வந்து கதவைத் திறக்க முயற்சி செய்யலாம் என்று கூறினார். ஒவ்வொரு புலவர்களுக்கும் தங்களது முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் ஒரு புலவர் வந்தார் அவர் படித்தப் ஓலைச்சுவடிகளைப் பார்த்து கதவை திறக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. மீதமிருந்த மூன்று புலவர்களும். அதே நிலையை அடைந்தன. ஐந்தாவதாக அந்தப் புலவர் ஒருத்தர் நன்றாக உறங்கி விட்டு ஓய்வு எடுத்து விட்டு வந்தார். அவர் வந்து கதவை சுற்றி சுற்றி பார்த்தார் கதவின் தாழ் அழுத்தியவுடன் கதவு தானாக திறந்தது. அந்த அறையில் அனைத்துப் பொருட்களும் குவியலாகக் கிடந்தது. மன்னர் அந்த புலவரைப் பார்த்து உங்களால் மட்டும் எப்படி இந்த கதவை திறக்க முடிந்தது என்று கேட்டார்.(tamil stories)
மன்னர் அவர்களே மற்ற நான்கு புலவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். ஆனால் நான் எதையும் கவனிக்காமல் இரவும் முழுவதும். நன்றாக உறங்கினேன் என்றார். நீங்கள் சற்று வித்தியாசமான கதவு என்று கூறினீர்கள். நான் அதை ஆராய்ந்த போது கதவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று உணர்ந்தேன். பிறகு அந்தக் அந்தக் கதவின் அருகில் வந்த போது கதவு பூட்டப் படவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன் பிறகு அதை தள்ளியயுடன் தானாக திறந்தது. என்று கூறினார். மன்னர் அவரின் பதிலை ஏற்றுக் கொண்டு நீங்கள் தான் இந்த உலகின் அதி புத்திசாலி என்று கூறினார்.(tamil stories)
அதற்கு சற்றும் தளராத புலவர் மன்னா நான் இந்த உலகின் புத்திசாலி அல்ல என்னை விட பல புத்திசாலிகள் இருக்கின்றனர் என்றுஇந்த அறையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தங்க நாணயங்களையும் நாட்டு மக்களை பயன்படுத்துட்டும் என்று கூறினார்.
ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் தெளிவான சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதுஇந்தக் கதையின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
0 Comments
thanks for your comments