ஒரு ஊரில் இருந்து அட்டு கிட்டு என இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அட்டு எந்த ஒரு விஷயத்தையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டான். ஆனால் கிட்டு என்பவன் மிகவும் இரக்க குணம் கொண்டவன். ஆகையால் அங்கு உள்ள ஊர் மக்கள் அனைவருக்கும் அவனை பிடிக்கும்.
( Thenaliraman story)
இவர்களின் தாயார் மரணத் தருவாயில் இருக்கும் பொழுது இவர்களுக்கு சொத்தாக ஒரு தென்னை மரம் , ஒரு பசுமாடு, ஒரு கம்பளி மூன்றையும் கொடுத்தனர். அவர்களின் தாயார் இந்த மூன்றையும் நீங்கள் சரிபாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்கு பின்பு தான் அவரின் தாயார் காலமானார்.( Tamil stories)
இந்த மூன்றையும் எப்படி பிரிக்க வேண்டும் என்று அட்டு தனது தம்பியான கிட்டுவிடும் கூறினார். தென்னை மரத்தை சரிபாதியாக மேல்பகுதி அண்ணனுக்கும் கீழ்ப்பகுதி தம்பிக்கும் என பிரித்தனர். அதேபோல் கம்பளியை இரவில் அண்ணனுக்கும் பகலில் தம்பிக்கும் என பிரித்தனர்.பசு மாட்டின் மேல் பகுதி அண்ணனுக்கும் கீழ்ப்பகுதி தம்பிக்கும் என்று பிரித்தனர். இப்படியே பல மாதங்கள் சென்றது. பசு மாட்டிற்கு தீவனம் வைப்பது மாட்டுச் சாணத்தை எடுப்பதே கிட்டுவின் வேலையாக இருந்தது. ஆனால் கிட்டுவின் அண்ணன் பாலை கறந்து விற்று. விடுவான். இதனால் கிட்டு இருக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. அதேபோல் தென்னை மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது உரங்கள் வைப்பது கிட்டுவின் வேலை அதில் வளரும் தேங்காய்கள் அனைத்துமே அவன் அண்ணனுக்கு சொந்தம். இப்படியே பல மாதங்கள் சென்றன.
கிட்டு அவனால் முடிந்த அனைத்தையும் செய்தான். ஒருமுறை கிட்டுவின் நண்பன் வீட்டிற்கு வந்த போது இங்கு நடக்கும் செயல்களை அனைத்தையும் அவன் சொன்னான். உன் நிலைமையை கேட்க எனக்கே பரிதாபமாக இருக்கிறது என்று வினவினான். நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேள் கிட்டும் என்றான். பக்கத்து ஊரில் தெனாலிராமன் எனும் ஒருவர் இருக்கிறார் அவரிடம் சென்று உனது குறைகளை சொல் அவர் நிச்சயமாக ஒரு முடிவை தருவார் என்று கூறினான்.கிட்டுவும் சரி நான் அவரை சென்று பார்க்கிறேன் என்று கூறினார்.(tamil thenaliraman story)
மறுநாள் தெனாலிராமனை பார்க்க பக்கத்து ஊருக்குச் சென்றான்.கிட்டு தெனாலிராமனை இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. முதல் முறை தெனாலி ராமனை பார்த்தபோது தெனாலிராமன் ஐயா நீங்கள் யார் என்று கேட்டார். ஐயா நான் பக்கத்து ஊரிலிருந்து தங்களைக் காண வந்து இருக்கிறேன் என்று கூறினான். கிட்டு தெனாலிராமனைப்
பார்த்து அங்கு நடக்கும் அனைத்தையும் கூறினான். இதை பொறுமையாக கேட்ட தெனாலிராமன் நான் இதற்கு விளக்கம் அளிக்கிறேன் என்று கூறினான். (Tamil stories)
முதலில் நீங்கள் போட்டிருக்கும் கம்பளியை இரவில் உங்களது அண்ணனுக்கு தரும்போது தண்ணீரில் நனைத்து கொடுக்கவும் என்று கூறினார். அப்படி செய்தால் இரவில் உங்களது அண்ணன் கம்பளியால் தூங்க முடியாது என்று கூறினார். இரண்டாவதாக நீங்கள் வளர்க்கும் பசுமாட்டிற்கு தீவனம் அளிக்க வேண்டாம் என்றும் கூறினான். மூன்றாவதாக நீங்கள் பார்க்கும் தென்னை மரத்தை எந்த ஒரு உரவும் போட வேண்டாம் என்றும் தண்ணீர்கூட ஊற்ற வேண்டாம் என்றும் தெனாலிராமன் கூறினார். இப்படி நீங்கள் செய்தால் பசு மாட்டிலிருந்து பால் கறக்க முடியாது என்றும் தென்னை மரத்திலிருந்து தேங்காய் பறிக்க முடியாது என்றும் தெனாலிராமன் ஆலோசனையை வழங்கினார் இதைக் கேட்டுவிட்டு ஐயா நான் இங்கு வந்ததற்கு ஒரு பலன் கிடைத்துள்ளது என்று மிகவும் மகிழ்ச்சியாக நன்றி என கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். (Tamil thenaliraman story)
தெனாலிராமன் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றியதால் கிட்டுவின் அண்ணன் திருந்தி விட்டான். தற்போது அவர்கள் வைத்திருக்கும் கம்பளியை இரவில் இருவருமே பகிர்ந்து கொள்கின்றன. மாட்டிற்கு இருவருமே தீவனம் வைத்து பத்திரமாக பார்த்துக் கொள்கின்றன இதேபோல் தென்னை மரத்திற்கு இருவருமே உரம் வைத்து வளர்த்து வருகின்றனர்.
இந்தக் கதை தொண்ணூறுகளில் பிறந்த அனைவருமே தனது ஐந்தாவது வகுப்பில் கண்டிப்பாக படித்திருக்க வேண்டும் இந்த கதை உங்களது சிறுவயதை நினைவுகூறும் என்று நம்புகிறோம்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
0 Comments
thanks for your comments