மாறன் மற்றும் செழியன் நண்பர்களின் கதை (tamil stories)

ஒரு ஊரில் செழியன் மாறன் என இருவர் இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். இவர்கள் இரண்டு பேரும் கடின உழைப்பாளிகள் இதில் செழியன் மட்டும் உழைக்கும் போது இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று யோசிக்கும் மனப்பான்மை கொண்டவன். மாறன் எப்பொழுதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன்.
  

           ( Tamil stories)

 இவர்கள் இருவரும் வாழ்ந்து வந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் வந்தது. இதனால் அங்கு உள்ள மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்கள் தண்ணீர் எடுத்து வர தினமும் மூன்று மைல் நடந்தே சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டு இருந்தது. இந்தக் கடினமான தண்ணீர் பஞ்சத்தை போக்க அங்கு உள்ள பெரியவர்கள் ஒரு முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணினர்.
   

யாராவது இருவரை தண்ணீர் கொண்டுவர சொல்லலாம் அவர்கள் கொண்டுவரும் தண்ணீருக்கு நாம் காசோலை கொடுத்து தண்ணீர் வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினர். இதற்கு அங்குள்ள ஊர் மக்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தனர்.அதே போல் அந்த இரண்டு பேரை நியமிக்க மக்கள் விருப்பம் தெரிவித்தனர் அவர்கள் இருவரும் செழியன் மற்றும் மாறன் இருவர் ஆவர்.(tamil stories)


இவர்களின் பணியானது தினமும் மூன்று மைல் தொலைவில் நடந்து சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து மக்களுக்கு தர வேண்டும் என்பதே ஆகும்.
இவ்வாறு பல நாட்கள் கழிந்தது இருவருமே கடினமாக உழைத்தனர்.
ஒரு நாள்இருவரும் தண்ணீர் சுமந்து கொண்டு வரும்போது செழியன் மாறா எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது என்று கூறினான் என்ன யோசனை செழியன் சொல் என்று மாறன் கேட்டான். நாம் இருவருமே இவ்வாறு தினமும் தண்ணீர் சுமந்து கொண்டிருக்க முடியாது என்றும் கூறினான் இதற்கு மாறன் சரி என்ன செய்யலாம் என்று கேட்டான் அதற்கு தான் நாம் இருவருமே மதியம் வரை மட்டுமே தண்ணீரை சுமந்து கொண்டு வரலாம் மதியத்திற்கு மேல் நமது ஊரில் இருந்து அந்த ஆற்றங்கரை வரை ஒரு குழியை பதித்து தண்ணீரை வெட்டி விடலாம் என்று கூறினார். இல்லை செழியன் எனக்கும் இந்த யோசனை சரியாகப்பட இல்லை நான் எப்பொழுதும்  தண்ணீரை சுமக்கிறேன் என்று மாறன் கூறினார்.

 மாறன் மறுத்த நிலையில் என்ன செய்வது என்று செழியன் யோசிக்க ஆரம்பித்தான். செழியன் சொன்ன யோசனைப்படி மாறன் கேட்கவில்லை.மாறன் வழக்கம்போல தண்ணீரை சுமக்க ஆரம்பித்தான்.
ஆனால் செழியன் மதியம் வரை மட்டுமே தண்ணீரை சுமந்தான். மதியத்திற்கு மேல் அவன் சொன்ன யோசனைப்படி குழியை வெட்ட ஆரம்பித்தான். இப்படியே பல மாதங்கள் கழிந்தது. ஒருவழியாக செழியன் குழியை வெட்டி முடித்தான். அந்தக் குழி வழியாக மூங்கில் மரங்களை பயன்படுத்தி தண்ணீர் செல்லும் பாதை போல மாற்றினார்.அந்த மூங்கில் மரம் தண்ணீர் பாதையானது மூன்று மைல் கடந்து அவர்கள் இருக்கும் ஊருக்கு வந்து அடைந்தது.
தண்ணீர்க் ஊருக்கு வந்ததை அடுத்து செழியன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். (Tamil stories)

இதை தனது நண்பனுக்கு தெரிவித்தான் ஆனால் மாறன் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை வழக்கம் போல் தண்ணீர் சுமக்க ஆரம்பித்தான்.
செழியன் ஊர்மக்களுக்கு ஒரு அறிவிப்பு கொடுத்தான் இந்தக் குழாயில் யார் வேண்டுமானாலும் தண்ணீர் பிடிக்கலாம் என்றும் அதற்கு அவர் காசோலை வழங்க வேண்டுமென்றும் அறிவித்தான்.(tamil stories)

அனைவரும் காசோலையை கொடுத்துவிட்டு தண்ணீரை கொண்டு சென்றனர். மாறன் கொண்டு வரும் தண்ணீரை மக்களும் வாங்கினர்.     ஒரு காலகட்டத்தில் மாறனால் வழக்கம்போல செயல்படவில்லை. அவன் படுத்த படுக்கையாகி விட்டான். செழியன் வழங்கும் காசோலையை பயன்படுத்தி மாறன் பிழைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.(tamil stories)


காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் பழமொழிக்கு ஏற்ப நமது உடலில் வலு இருக்கும் வரை மட்டுமே நம்மால் உழைக்க முடியும் வலு இழந்து விட்டால் மாறனை போல நாமும் படுத்த படுக்கையாகி விட வேண்டும்.


ஆகையால் நீங்கள் உழைக்கும் போது வேறொரு வழியை தேடுங்கள்.

இந்தக் கதை உங்களுக்கு
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...

Post a Comment

0 Comments